3 பேருக்கு வெட்டு: திமுக கவுன்சிலரின் மகன் கைது

3 பேருக்கு வெட்டு: திமுக கவுன்சிலரின் மகன் கைது
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​ அறு​பத்​து​மூவர்​பேட்டையைச் சேர்ந்​தவர் செல்​வம். இவரது மனைவி கற்​பகத்தை எதிர்​வீட்​டில் வசிக்​கும் அசோக்​கு​மார் என்​பவர் அரி​வாளால் வெட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

அதைத் தடுக்க முயன்ற கணவர் செல்​வம், மகன் கவியரசன் ஆகியோ​ருக்​கும் வெட்டு விழுந்​தது. 3 பேரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அசோக்​கு​மார் மயி​லாடு​துறை காவல் நிலை​யத்​தில் சரண் அடைந்​தார். முன்​விரோதம் காரண​மாக இந்த தாக்​குதலை நடத்​தி​யது தெரிய​வந்​தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அசோக்குமார் திமுக நகராட்சி கவுன்​சில​ரான ஜெயலட்​சுமி முரு​க​னின் மகன் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

3 பேருக்கு வெட்டு: திமுக கவுன்சிலரின் மகன் கைது
ஆலங்குளம் அருகே தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in