

தூத்துக்குடி: டிஜிட்டல் கைது என மிரட்டி, முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி செய்த வேலூர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த 61 வயது முதியவரின் செல்போனில் பேசிய மர்ம நபர்கள், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் என தன்னை அறிமுகம்
செய்துள்ளார். மேலும், பயங்கரவாதி ஒருவரின் செல்போன் எண், முதியவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறும் அச்சுறுத்தியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த முதியவர், தன்னை விடுவிக்க உதவு கோரியுள்ளார். இதை பயன்படுத்தி மர்மநபர்கள் ரூ.48.80 லட்சம் பணத்தை, 3 தவணைகளாக பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸில் முதியவர் புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த சாபுதீன் என்பவரை கைது செய்தனர்.