அடகுவைக்க வந்த விவசாயிகளிடம் 12 பவுன் நகை பெற்று மோசடி: கூட்டுறவு ஊழியர்கள் கைது

பழனியப்பன், செல்வராஜ்

பழனியப்பன், செல்வராஜ்

Updated on
1 min read

தஞ்சாவூர்: ​திரு​வோணம் அருகே கூட்​டுறவு வங்​கி​யில் அடகு வைக்க வந்த விவ​சா​யிகளிடம் 12 பவுன் நகைகளை பெற்​று, பணத்தை கொடுக்​காமல் மோசடி செய்த கூட்​டுறவு வங்​கி​யின் செய​லா​ளர், எழுத்​தர் ஆகியோர் போலீஸாரால் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வோணத்தை அடுத்த தளி​கை​விடுதி கிராமத்​தைச் சேர்ந்த விவ​சா​யிகள் நல்​லை​யன், வைரக்​கண்ணு, முரு​கேசன்.இவர்​கள் 2023-ம் ஆண்டு தளி​கை​விடு​தி​யில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்​டுறவு வங்​கி​யில் தங்​களின் நகைகளை அடகு வைக்க தனித்​தனி​யாக சென்​றுள்​ளனர்.

அப்​போது, அங்கு பணி​யில் இருந்த வங்​கிச் செய​லா​ளர் செல்​வ​ராஜ், எழுத்​தர் பழனியப்​பன்​ ஆகியோர் விவ​சா​யிகளிடம் இருந்து 12 பவுன் நகைகளை அடகு​வைக்க பெற்​றுக் ​கொண்​டு, மறு​நாள் வந்து பணத்தை பெற்​றுச் செல்​லு​மாறு தெரி​வித்​துள்​ளனர்.

அதன்​படி, விவ​சா​யிகள் 3 பேரும் மறு​நாள் சென்று பணத்தை கேட்​ட​போது, அலு​வலர்​கள் பணத்தை கொடுக்​காமல் அலைக்​கழித்​துள்​ளனர். இதுகுறித்து கூட்​டுறவுத் துறை​யின் உயர் அதி​காரி​களிடம் விவ​சா​யிகள் புகார் தெரி​வித்​தனர்.

அதன்​பேரில், செல்​வ​ராஜ், பழனியப்​பன் ஆகியோர் மீது துறைரீ​தி​யாக விசா​ரணை நடை​பெற்று வந்​துள்​ளது. இதனால் அவர்​கள் இரு​வரும் 2 ஆண்​டு​களாக பணிக்கு வராமல் இருந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், புகாரின் பேரில் திரு​வோணம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​ய​தில், கூட்​டுறவு வங்கி ஊழியர்​கள் செல்​வ​ராஜ், பழனியப்​பன் ஆகியோர் விவ​சா​யிகளிடம் நகைகளைப் பெற்​று, தனி​யார் அடகுக் கடைகளில் அடகு வைத்​து, மோசடி​யில் ஈடு​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, இரு​வரை​யும் நேற்று முன்​தினம் கைது செய்தனர்.

<div class="paragraphs"><p>பழனியப்பன், செல்வராஜ்</p></div>
சித்திரைத் திருவிழாவின்போது மோதல்: மதுரையில் முன்விரோதத்தில் சிறுவன் கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in