வேலூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: தமிழக - ஆந்திர எல்லையில் உடல் வீச்சு

வேலூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: தமிழக - ஆந்திர எல்லையில் உடல் வீச்சு

கொலை செய்யப்பட்ட டேனி வலனரசு

Updated on
2 min read

வேலூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை, நண்பர்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மேலும், அவரது உடலை தமிழக ஆந்திர எல்லையில் வீசிய நிலையில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின் றனர். மற்றொருவரை பிடிக்க தனிப்படை போலீஸார் பாண் டிச்சேரி விரைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனி வளனரசு (19). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.பாதுகாப்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் ஆரணி அடுத்த தொந்திகரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), பாண்டிச்சேரியைச் சேர்ந்த பார்த்த சாரதி (19). இவர்கள், வேலூர் சாயிநாதபுரம் பொன்னி அம்மன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்றுவந்தனர்.

இவர்களுடன், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்பா வர்மா என்ற முதலாம் ஆண்டு பாதுகாப்பியல் துறை மாணவரும் தங்கியிருந்துள் ளார். கல்லூரிக்கு பருவத்தேர்வு விடுமுறை என்பதால் அனை வரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

கல்லூரி என்.சி.சி மாணவர் களுக்கான முகாம் தாம்பரத்தில் நேற்று தொடங்க இருந்ததால் அங்கு செல்வதற்காக டேனி கடந்த 1-ம் தேதி மாலை சாயி நாதபுரத்தில் உள்ள தங்கும் அறைக்கு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் அவர் தொடர்புகொள்ள வில்லை.

டேனி வளனரசுவின் இரு சக்கர வாகனத்தை அவரது தந்தை ஆனந்த்திடம், கிஷோர் கண்ணன் நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில்கொடுத்துள் ளார். அப்போது, 'டேனி, இந்த வண்டியை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்' என்று மட்டும் கூறியுள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த அவர் டேனியின் கைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டபோது 'ஸ்விட்ச் ஆப்' ஆகியிருந்தது. இதையடுத்து, கிஷோரிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த ஆனந்த், மகனின் வேறு சில நண்பர்களிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரித் துள்ளார். பின்னர், தனது மகனை காணவில்லை என வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்பேரில், ஆய் வாளர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கிஷோர் கண்ணனிடம் விசாரித்தபோது, டேனியை, நானும், நண்பர் பார்த்த சாரதியும் சேர்ந்து கொலை செய்து உடலை தமிழக - ஆந்திர எல்லையில் வீசியதாக ஒப்புக் கொண்டார்.

பின்னர், கிஷோர் கண்ணன் கூறிய இடத்தில் வீசப்பட்டிருந்த டேனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பார்த்தசாரதியை கைது செய்ய தனிப்படை போலீஸார் பாண்டிச்சேரி விரைந்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீஸார் கூறும்போது "டேனி வளனரசு, கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி மூவரும் ஒரே வகுப்பு நண்பர்கள். அதே வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் கடந்த ஒரு மாதமாக பெரியளவில் இவர்களுக்குள் பகையாக மாறியுள்ளன.

கிஷோர் கண்ணன், பார்த்த சாரதி ஆகியோர் சேர்த்து டேனியை கொலை செய்ய ஒரு வாரம் முன்பே திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது, கல்லூரி விடுமுறை என்பதால் அவரது வீட்டுக்கே சென்று கொலை செய்யவும் முடிவு செய்துள்ளனர். அங்கு வீட்டில் டேனி இல்லாததால் சதித்திட்டத்தை கைவிட்டுள்ளனர்.

பின்னர், ஜன. 3-ம் தேதி என்சிசி கேம்ப் செல்ல வேண்டும் என்ற நிலையில் ஜன.1-ம் தேதி இரவு சாயி நாதபுரத்தில் உள்ள அறைக்கு டேனி வந்திருப்பதை கிஷோரும், பார்த்தசாரதியும் தெரிந்துகொண்டனர். இருவரும் அறைக்கு அறைக்கு சென்றபோது அங்கிருந்த டேனியை பெல்டால் கழுத்தை இறுக்கியும், இரும்பு ராடால் தலையில் அடித்தும் கொலை செய்துள்ளனர். இரும்பு உளியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்த டேனியின் உடலை அப்புறப் படுத்த முடிவு செய்துள்ளனர்.

டேனியின் தலைக்கு குல்லா, மப்ளர் போட்டு சுற்றியதுடன், குளிர்கால ஜாக்கெட்டை டேனிக்கு அணிவித்துள்ளனர். பின்னர், டேனியின் உடலை இரு சக்கர வாகனத்தின் நடுவில் உட்கார்ந்தபடி வைத் துக்கொண்டு கிறிஸ்டியான். பேட்டை சோதனை சாவடியை கடந்து சித்தப்பாறை மலை அடிவாரத்தில் வீசிவிட்டு இரு வரும் வேலூர் திரும்பியுள்ளனர்" என தெரிவித்தனர்.

வேலூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: தமிழக - ஆந்திர எல்லையில் உடல் வீச்சு
சென்னையில் இளைஞரை மிரட்டி 12 ஐபோன்களை பறித்த இருவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in