

எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் தவுபீக் அப்துல்லா (26). இவர் ஈவ்னிங் பஜாரில் செல்போன் கடையில் பணியாற்றுகிறார்.
கடந்த மாதம் 29-ம் தேதி இரவு இவர் கடையிலிருந்து 12 ஐபோன்களை எடுத்துக் கொண்டு, அதனை பார்சல் செய்வதற்காக, தனது பைக்கில் சென்றார்.
மூர் தெரு, மூக்கர் நல்ல முத்து தெரு சந்திப்பு அருகே, அவரை பின் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தவுபீக் அப்துல் லாவை மிரட்டி, 12 ஐபோன் களை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தவுபீக் அப்துல்லா வடக்கு கடற்கரை போலீஸில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொருக்குப்பேட்டையை சேர்ந்த சூர்யா (28), காசி மேட்டைச் சேர்ந்த சந்தோஷ் (25) ஆகியோரை கைது செய் தனர். அவர்களிடம் இருந்து 2 ஐபோன்களை பறிமுதல் செய்தனர்.