சென்னை | நடன கலைஞரிடம் பாலியல் அத்துமீறல் கல்லூரி மாணவர் கைது

சென்னை | நடன கலைஞரிடம் பாலியல் அத்துமீறல் கல்லூரி மாணவர் கைது
Updated on
1 min read

சென்னை: அடை​யாறு பகு​தி​யில் வசித்து வரும் 33 வயதுடைய பெண் நடனக் கலைஞர் கிளாசிக்​கல் டான்ஸ் வகுப்பு எடுத்து வரு​கிறார். இவர் நேற்று முன்​தினம் காலை நடன வகுப்பு எடுப்​ப​தற்​காக இருசக்கர வாக​னத்​தில் சாஸ்​திரி நகர் 1-வது குறுக்​குத் தெரு வழி​யாக சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, மற்​றொரு இருசக்கர வாக​னத்​தில் பின்​தொடர்ந்து வந்த இளைஞர் ஒரு​வர், நடன கலைஞரிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்டு தப்பி உள்​ளார்.

இதில் அதிர்ச்​சி​யடைந்த நடன கலைஞர் இது தொடர்​பாக அடை​யாறு அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, பெண் வன்​கொடுமை தடுப்பு சட்​டம் உட்பட மேலும் சில பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், பெண் நடன கலைஞரிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்டு தப்​பியது திரு​வான்​மியூர் மருந்​தீஸ்​வரர் நகரைச் சேர்ந்த கணேஷ் (21) என்​பது தெரிந்​தது.

கல்லூரி மாணவ​ரான அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். அவரது இருசக்கர வாக​ன​மும் பறி​முதல்​ செய்​யப்​பட்​டது.

சென்னை | நடன கலைஞரிடம் பாலியல் அத்துமீறல் கல்லூரி மாணவர் கைது
சர்வதேச கஞ்சா கடத்தலின் முக்கிய நபர் திருச்சியில் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in