விநாயகர் ஊர்வலத்தில் தகராறு: சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் படுகொலை

6 பேரிடம் போலீஸார் விசாரணை
சீனிவாசன்

சீனிவாசன்

Updated on
1 min read

சென்னை: சென்னை​யில் விநாயகர் ஊர்வல தகராறில் விழாக் குழுவை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்​டுநர் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். இது தொடர்​பாக ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 6 பேரை பிடித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னை, ராமாபுரம் வெங்​கடேஷ்வரா நகரை சேர்ந்​தவர் சீனி​வாசன் (45). இவர் சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பேருந்து ஓட்​டுந​ராக பணி​யாற்றி வந்​தார். விநாயகர் சதுர்த்​தி​யையொட்​டி, நேற்று முன்​தினம் அங்​குள்ள ராஜ கணபதி கோயி​லில் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. இரவு அப்​பகு​தி​யில் விநாயகர் சிலை ஊர்​வலம் நடை​பெற்​றது.

விநாயகர் ஊர்​வலம் வெங்​கடேஷ்வரா நகரின் 13-வது தெரு வழி​யாக சென்​ற​போது, பாதி​யிலேயே திரும்​பிச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது. இதனால் அங்கு சாமி ஊர்​வலத்தை காண காத்​திருந்​தவர்​கள் அதிருப்தி அடைந்​தனர். இதுகுறித்து விழாக் குழு​வினரிடம் அவர்​கள் கேள்வி எழுப்​பினர்.

அப்​போது, விழாக்​குழுவை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்​டுநர் சீனி​வாசன் மற்​றும் அதே பகு​தியை சேர்ந்த அனிஸ்​கு​மார், சுரேஷ், வீரா, சஞ்​சய், ரிதீஷ், ராஜேஷ் ஆகியோ​ருக்​கும், ஐ.டி. நிறுவன ஊழியர் ஆனந்த் (35), புவனேஷ், தினேஷ், அஸ்​வின், ஹரி, குட்​வின் உள்​ளிட்​டோருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டது. இது பின்​னர் கைகலப்​பாக மாறியது.

தகவல் அறிந்த ராமாபுரம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று இருதரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்​தினர். இதையடுத்து அனை​வரும் கலைந்து சென்​றனர். இந்​நிலை​யில், ஆனந்த், புவனேஷ் உள்பட 6 பேர், விழாக்​குழுவை சேர்ந்த அனிஸ்​கு​மாரின் வீட்​டுக்கு சென்று தகராறில் ஈடு​பட்டு அவரை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.

இதையறிந்த சீனி​வாசன் உள்​ளிட்​டோர் அங்கு ஓடிச்​சென்று எதிர்​தரப்​பினரிடம் தகராறில் ஈடு​பட்​டுள்​ளனர். அப்​போது ஆத்​திரமடைந்த ஆனந்த், சீனி​வாசனின் மார்​பில் ஓங்கி தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இதில் சீனி​வாசன் மயங்கி விழுந்​தார்.

நண்​பர்​கள் அவரை மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு சீனி​வாசனை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்து ரா​மாபுரம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து ஐ.டி. நிறுவன ஊழியர் ஆனந்த், ஹரி உள்​ளிட்​ட 6 பேரை பிடித்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>சீனிவாசன்</p></div>
அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in