சென்னை: மலையாள நடிகையிடம் ஓட்டல் ஊழியர் அத்துமீறல்

சென்னை: மலையாள நடிகையிடம் ஓட்டல் ஊழியர் அத்துமீறல்
Updated on
1 min read

தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை ஒருவர. சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் ஒரு மாதம் தங்குவதற்காக அறை எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நடிகை உணவு ஆர்டர் செய்ய முயன்ற போது. அங்கிருந்த இண்டர்காம் வேலை செய்ய வில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து நிர் வாகத்திடம் புகார் அளித் ததைத் தொடர்ந்து, ஆலந்தூரைச் சேர்ந்த 20 வயதான ஊழியர் ஒருவர் இண்டர்காமைச் சரிசெய்ய நடிகையின் அறைக்குச் சென்றுள்ளார். இண்டர்காமை சரி செய்த பின், அந்த ஊழியர் நடிகையிடம், 'நீங்கள் மலையாள நடிகை தானே? என்று கேட்டு அவரைத் தொட்டு தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த நடிகை, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு - அறைக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாம்பலம் போலீஸார். அந்த ஊழியரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டு, பகுதி நேரமாக இந்த ஹோட்டலில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

போலீஸார் எச்சரிக்கை: மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்த போலீஸார். தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அந்த ஊழியரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த நடிகை உடனடியாக ஹோட்டலை காலி செய் துவிட்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார்.

சென்னை: மலையாள நடிகையிடம் ஓட்டல் ஊழியர் அத்துமீறல்
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in