

மேற்கு வங்கம் மாநிலம், ஹவுராவில் இருந்து சென்னை வழியாக திருச்சி செல்லும் விரைவு ரயிலில் ரூ.7.54 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர் பாக, ராஜஸ்தான் இளைஞரிடம் விசாரணை நடைபெறுகிறது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக திருச்சி செல்லும் விரைவு ரயில் வந்தது.
அதில் இறங்கி வந்த பயணிகளில் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது பைகளை சோதித்தபோது. அதில் ரூ.7.54 லட்சம் இருந்தது. ஆனால், இப்பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதையடுத்து, அவரிடம் நடத் தப்பட்ட விசாரைணயில், அந்த நபர், ராஜஸ்தான் மாநிலம், ஜோத் பூர் பிலாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டாராம் காதவ் (25) என்பதும், நெல்லூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் கணக்கில் கட்டாத பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து, அவரை மேல் நடவடிக்கைக்காக வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பூரில் ரூ.6 லட்சம் சிக்கியது: கோவை - சென்னை இன்டர் சிட்டி விரைவு ரயிலில் நேற்று பெரம்பூரில் வந்து இறங்கிய தண்டாயுதபாணி என்பவரிடம் ஆர்பிஎஃப் போலீஸார். உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.6.05 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.