அரசு வேலைக்கு ரூ.74 லட்சம் மோசடி: மக்கள் தொடர்பு அலுவலர் மீது வழக்கு பதிவு

அரசு வேலைக்கு ரூ.74 லட்சம் மோசடி: மக்கள் தொடர்பு அலுவலர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

பெரியகுளம்: அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி ரூ.74 லட்​சம் மோசடி செய்​த​தாக மக்​கள் தொடர்பு அலு​வலர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்பாக தேனி மாவட்ட குற்​றப்​பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், தேனி மாவட்​டம் பெரியகுளம் பகு​தி​யில் உள்ள தாமரைக்​குளம் மகாத்மா காந்தி தெரு​வைச் சேர்ந்த முனீஸ்​வரன் மனைவி சாந்தி (48).

இவரது மகன் சூரிய​நா​ராயணன் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்​டிருந்​தார். 2021-ல் சாந்​தி, தேனி ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செய்​தி-மக்​கள் தொடர்பு அலு​வல​ராகப் பணிபுரிந்த சண்​முகசுந்​தரத்தை தொடர்பு கொண்​டார்.

அப்​போது தனக்கு உயர​தி​காரி​கள், அரசி​யல்​வா​தி​களை நன்கு தெரி​யும், அரசு வேலை வாங்​கித் தரு​கிறேன் என்று சண்​முகசுந்​தரம் கூறி​யுள்​ளார். இதை நம்​பிய சாந்தி ரூ.50 லட்​சம் கொடுத்​துள்​ளார்.

இதே​போல, செல்​லத்​தம்​பி, பவித்​ரா, பழனிக்​கு​மார், முத்​துப்​பாண்டி ஆகியோரிட​மும் ரூ.24 லட்​சம் பெற்​றுக்​கொண்​டு, வேலை வாங்​கித் தராமல் ஏமாற்​றிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட குற்​றப்​பிரிவு காவல் நிலை​யத்​தில் சாந்தி புகார் செய்​தார். இதனடிப்​படை​யில், சண்​முகசுந்​தரம், அவரது மனைவி செண்​பகவல்லி ஆகியோர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர். புகாருக்கு உள்​ளான சண்​முகசுந்​தரம் தற்​போது சேலம் மாநக​ராட்சி மக்​கள் தொடர்பு அலு​வல​ராகப் பணிபுரி​கிறார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அரசு வேலைக்கு ரூ.74 லட்சம் மோசடி: மக்கள் தொடர்பு அலுவலர் மீது வழக்கு பதிவு
தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று கோயிலில் தேங்காய் உடைத்த மனுதாரர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in