அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: ஊழியர் உட்பட 5 பேர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: ஊழியர் உட்பட 5 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி, ரூ.18 லட்​சம் பெற்று மோசடி செய்த புகாரில், பல்​கலைக்​கழக ஊழியர் உட்பட 5 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

சென்னை புதிய பெருங்​களத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ்கு​மார் (38), தனி​யார் நிறு​வனத்​தில் டெலிவரி ஊழிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவருக்​குக் கடந்த 2025-ம் ஆண்டு கோபி​நாத் என்ற எலக்ட்​ரீஷியனுடன் அறி​முகம் கிடைத்​துள்​ளது.

அவர் தானும் தனது சகோ​தரர் சரவணனும் அரசு வேலைக்​காக முயன்று வரு​வ​தாக கோபி​நாத்​திடம் தெரி​வித்​துள்​ளார். இதைக் கேட்ட கோபி​நாத் தனது நண்​பர் கிஷோர் என்​பவரை அறி​முகப்​படுத்​தி​னார்.

கிஷோர் அவர்​களை அமர்​பிர​சாத் என்​பவரிடம் அழைத்​துச் சென்​றுள்​ளார். அமர்​பிர​சாத் தனது தம்பி சசிகு​மார் அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் அலு​வலக உதவி​யாள​ராகப் பணி​யாற்றி வரு​வ​தாக​வும், அவருக்​குப் பெரிய மனிதர்​களு​டன் நெருங்​கிய தொடர்பு இருப்​ப​தால் எளி​தாக வேலை வாங்​கித் தர முடி​யும் என்​றும் ஆசை வார்த்​தைகளைக் கூறி​யுள்​ளார்.

இவர்​களின் பேச்சை உண்மை என்று நம்​பிய தினேஷ்கு​மார் மற்​றும் அவரது சகோ​தரர், கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் அண்ணா பல்​கலைக்​கழக வளாகத்​துக்​குள்​ளேயே வைத்து சசிகு​மாரிடம் ரூ.18 லட்​சத்தை நேரில் கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது.

பணத்​தைப் பெற்​றுக் கொண்ட சசிகு​மார் மற்​றும் அவரது கூட்​டாளி​கள், நீண்ட நாட்​களாகி​யும் வேலை வாங்​கித் தரவில்​லை.

பணத்​தைத் திரும்​பக் கேட்​ட​போதும் முறை​யாக பதிலளிக்​காமல் இழுத்​தடித்து ஏமாற்றி வந்​துள்​ளனர். இதையடுத்து தாங்​கள் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த தினேஷ்கு​மார், இதுகுறித்து கடந்த 12-ம் தேதி கோட்​டூர்​புரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இப்​பு​காரின் அடிப்​படை​யில், அண்ணா பல்​கலைக்​கழக ஊழியர் சசிகு​மார் உட்பட கூட்​டாளி​கள் 5 பேர் மீதும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இது தொடர்​பாகத் தீவிர வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: ஊழியர் உட்பட 5 பேர் மீது வழக்கு
பால் கொள்முதலை அதிகரிக்க உரிய நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in