நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்த வழக்கு: தொழிலதிபர் அழகப்பன் கைது

நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்த வழக்கு: தொழிலதிபர் அழகப்பன் கைது
Updated on
1 min read

சென்னை: நடிகை கவுதமி நில மோசடி வழக்​கில் தொழில​திபர் அழகப்​பன் கைது செய்​யப்​பட்​டார். கடந்த 2023-ம் ஆண்டு நடிகை கவுதமி சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் ஒன்றை அளித்​தார்.

அதில், சென்னை வேளச்​சேரியைச் சேர்ந்த கட்​டு​மான நிறுவன அதிபர் அழகப்​பன், பெரும்​புதூரில் தனக்கு சொந்​த​மான ரூ.25 கோடி மதிப்​புள்ள 46 ஏக்​கர் நிலத்தை ரூ.6 கோடி கொடுத்து ஏமாற்றி தன்​வசப்​படுத்​திக் கொண்​ட​தாக குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்​தப் புகாரின் அடிப்​படை​யில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி அழகப்​பனை கைது செய்​தனர். முதல்​கட்ட விசா​ரணை​யில், இந்த நில மோசடி​யில் பெரும் அளவில் சட்​ட​விரோத பணப் பரி​மாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாரின் பரிந்​துரை​யின் பேரில், அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் இந்த வழக்கை கையில் எடுத்​தனர். கடந்த ஜூன் மாதம் அழகப்​பனுக்​கு தொடர்​புடைய 6 இடங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

அப்​போது கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களின் அடிப்​படை​யில், விசா​ரணைக்கு ஆஜராகும்​படி அழகப்​பனுக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டது. அதன்​படி, நேற்று சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் அழகப்​பன் ஆஜரா​னார்.

அவரிடம் அதி​காரி​கள் நடத்​திய நீண்ட நேர விசா​ரணைக்​குப் பிறகு, நேற்று மாலை அவர் கைது செய்​யப்​பட்​டார். மேலும், இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற நபர்​களை​யும் கைது செய்ய அமலாக்​கத்​துறை தீவிர நடவடிக்​கை எடுத்து வருகிறது.

நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்த வழக்கு: தொழிலதிபர் அழகப்பன் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சம்பவத்தை நேரில் பார்த்த சகோதரர் உட்பட இருவரிடம் சிபிஐ விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in