மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு

மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: மாநக​ராட்சி பூங்​காவை சேதப்​படுத்​தி​ய​தாக அதி​முக மாவட்​டச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​ராஜேஷ் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

சென்னை, கொடுங்​கையூர், அன்னை சத்யா நகரில் சாலை​யோர பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதை ஆர்.கே.நகர் எம்​எல்ஏ ஜே.ஜே. எபினேசர் கடந்த 29-ம் தேதி திறந்து வைத்​தார்.

மறு​நாள் அங்கு சென்ற அதி​முக வட சென்னை வடக்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​ராஜேஷ் மற்​றும் சிலர் பூட்டி வைக்​கப்​பட்​டிருந்த சாலை​யோர பூங்​கா​வில் நுழைந்து மின் விளக்​கு​கள், புல்​வெளி​கள் மற்​றும் இரும்​புக் கம்​பிகளை சேதப்​படுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

மேலும், தரமற்ற முறை​யில் பூங்கா கட்​டப்​பட்​டிருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டுள்​ளனர். இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்​சி​யின் 4-வது மண்டல உதவிப் பொறி​யாளர் சத்​யன் கொடுங்​கையூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் ஆர்​.எஸ்​.​ராஜேஷ் உட்பட மேலும் சிலர் மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இதற்கிடையே, உதவிப் பொறி​யாளர் சத்​யன் தூண்​டு​தலின் பேரில் தமிழரசன் என்​பவர் வீடு தேடி வந்து மிரட்​டி​விட்​டுச் சென்​ற​தாக தண்​டை​யார்​பேட்டை காவல் நிலை​யத்​தில் ஆர்​.எஸ்​.​ராஜேஷ் புகார் அளித்​துள்​ளார். அதுகுறித்​தும் வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு
உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in