

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கம்போல வரவேற்பையும். விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கும் இந்த பட்ஜெட், நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதன் மூலம் கவனம் ஈர்க்கிறது.
ரூ.53.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுடன், பிப்ரவரி 1 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உள்ளன.
17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கும் 7 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் தனிப் பயன்பாட்டுக்கான மருந்துகளுக்கும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்குக் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.