சென்னை புழல் பகுதியில் தொழிலதிபர், குடும்பத்தினரை கட்டிப்போட்டு 30 பவுன் நகை, ரூ.25 லட்சம் கொள்ளை

முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்
புழல் பகுதியில் முகமூடி கொள்ளை நடைபெற்ற வீடு.

புழல் பகுதியில் முகமூடி கொள்ளை நடைபெற்ற வீடு.

Updated on
1 min read

சென்னை: புழல், மகாவீர் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் விஜயகு​மார். ஜவுளி அதிப​ரான இவர், மணிப்​பூர் மாநிலத்​தில் கம்​பளிப் போர்வை மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களை விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்​பல் விஜயகு​மார் வீட்​டின் சுவர் வழி​யாக ஏறி உள்ளே குதித்​துள்​ளனர். முகமூடி அணிந்து வந்த அந்த கும்​பல், வீட்டு கதவின் முன்பு தயா​ராக இருந்​துள்​ளனர்.

விஜயகு​மாரின் மனைவி வசந்தா காலை​யில் வீட்​டின் கதவைத் திறந்​த​போது, தயா​ராக நின்​றிருந்த கொள்ளை கும்​பலைச் சேர்ந்த ஒரு​வர் வசந்​தா​வின் கழுத்​தில் கத்​தியை வைத்​து, மிரட்டி வீட்​டுக்​குள் அழைத்​துச் சென்​றார்.

பின்​னர் அவரது கைகளைக் கயிற்​றால் கட்​டி, சத்​தம் போடா​மல் இருக்க வாயில் பிளாஸ்​டிக் டேப்பை ஒட்​டினர். சத்​தம் கேட்டு எழுந்து வந்த விஜயகு​மாரை, இரு​வர் கழுத்​தில் கத்​தியை வைத்து மிரட்​டினர்.

தொடர்ந்து அவரது கைகளை​யும் அதே பாணி​யில் கட்டி வாயில்டேப் ஒட்​டினர். அப்​போது, மேல்தளத்​தில் தூங்​கிக் கொண்​டிருந்த விஜயகு​மாரின் வயதான தாயார் லட்​சுமி மற்​றும் மகள்​கள் சினே​கா, பவித்ரா ஆகியோ​ரும் சத்​தம் கேட்டு வெளியே வந்​தனர்.

அவர்​களை​யும் கொள்ளை கும்​பலை சேர்ந்​தவர்​கள் கத்​தி​முனை​யில் கட்​டுப்​போட்​டனர். பின்​னர் அனை​வரை​யும் ஒரே அறை​யில் வைத்து பூட்​டினர். பின்​னர், விஜயகு​மாரை மட்​டும் தனி​யாக அழைத்து படுக்​கையறை​யில் இருந்த பீரோவை திறக்க வைத்து அதிலிருந்த ரூ.25 லட்​சத்தை கொள்​ளை​யடித்​தனர்.

தொடர்ந்து விஜயகு​மாரின் தாய், மனை​வி, மகள்​கள் என அனை​வரும் அணிந்​திருந்த நகைகள், வீட்​டிலிருந்த நகை என 30 பவுன் தங்க, வைர நகைகளை கொள்ளை அடித்​து, சாக்​குப்பை ஒன்​றில் மூட்டை கட்டி தாங்​கள் கொண்டு வந்த காரில் தப்​பிச் சென்​றனர்.

இந்​நிலை​யில், வழக்​கம் போல பணிக்கு வந்த வேலை​யாட்​கள், விஜயகு​மார் உட்பட அனை​வரை​யும் மீட்​டனர். பின்​னர் இந்த விவ​காரம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். தகவல் அறிந்து புழல் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​தனர்.

மோப்ப நாய் வரவழைக்​கப்​பட்​டது. மேலும் தடய​வியல் நிபுணர்​களும் வரவழைக்​கப்​பட்டு கொள்​ளை​யர்​களின் ரேகைகளை சேகரித்து சென்​றனர். முதல் கட்​ட​மாக 5 தனிப்​படைகளை அமைத்​து போலீ​ஸார்​, கொள்​ளை​யர்​களை தேடி வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>புழல் பகுதியில் முகமூடி கொள்ளை நடைபெற்ற வீடு.</p></div>
மாடு வளர்ப்பை முறைப்படுத்த மைக்ரோசிப் பொருத்தம்: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in