ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரின் நிலத்தை ஐ.டி. ஊழியரிடம் விற்று ரூ.57 லட்சம் மோசடி: தரகர் கைது

ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரின் நிலத்தை ஐ.டி. ஊழியரிடம் விற்று ரூ.57 லட்சம் மோசடி: தரகர் கைது
Updated on
1 min read

சென்னை: உரிமை​யாளர் போல் ஆள்​மாறாட்​டம் செய்​து, வேறு ஒரு​வரின் நிலத்தை ஐ.டி. ஊழியரிடம் விற்​பனை செய்து ரூ.56.98 லட்​சம் மோசடி செய்த நில புரோக்​கர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை மேற்கு சைதாப்​பேட்​டையை சேர்ந்​தவர் பார்த்​திபன் (33).

தனி​யார் நிறு​வனத்​தில் மென்​பொருள் பொறி​யாள​ராக பணி​யாற்​றுகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு காலிமனை வாங்​கு​வதற்​காக இடம் பார்த்​துக் கொண்​டிருந்​தார். அப்​போது அவருக்கு நில புரோக்​க​ரான பால​வாக்​கத்​தைச் சேர்ந்த அப்​துல் ஹக் (52) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது.

அவர் பள்​ளிக்​கரணை விஜிபி சாந்தி நகரில் 2,430 சதுர அடி காலிமனை விலைக்கு உள்​ள​தாக கூறி​யுள்​ளார். பின்னர் நில உரிமையாளர் என கூறி ஒரு​வருடன் 2021 பிப்​.22-ம் தேதி ஒப்​பந்​தம் செய்து ரூ.56.98 லட்​சம் கொடுத்து நிலம் பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. பணத்தை பார்த்​திபனிட​மிருந்து அப்​துல் ஹக் பெற்​றுக் கொண்​டார்.

இந்​நிலை​யில் தான் வாங்​கிய காலிமனை​யின் உண்​மை​யான உரிமை​யாளர் வேறொரு​வர் என்​பதும், ஆள்​மாறாட்​டம் மூலம் காலிமனையை பத்​திரப்​ப​திவு செய்​து, அப்​துல் ஹக் மற்​றும் அவரது அண்​ணன் அப்​துல் ஹாதி ஆகிய இரு​வரும் கூட்​டாக ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்​ததும் தெரிய​வந்​தது.

இதுகுறித்து பார்த்​திபன் கடந்த ஜூன் 11-ம் தேதி சைதாப்​பேட்டை போலீஸில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பார்த்​திபன் அளித்த புகார் உண்மை எனத் தெரிய​வந்​தது. இதையடுத்து அப்​துல் ஹக்கை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரது அண்​ணனை தேடி வரு​கின்​றனர்​.

ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரின் நிலத்தை ஐ.டி. ஊழியரிடம் விற்று ரூ.57 லட்சம் மோசடி: தரகர் கைது
கஞ்சா வழக்கில் சினிமா தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது: அதிமுக ஆதரவாளர்களை அழைத்து வந்ததால் காவல் நிலையம் முற்றுகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in