கோவையில் அதிர்ச்சி: கல்லால் தாக்கி சிறுவன் கொலை - கடத்தல் நாடகமாடிய நண்பர்கள் கைது

கொலை செய்யப் பட்ட ரித்தீஷ்.

கொலை செய்யப் பட்ட ரித்தீஷ்.

Updated on
2 min read

கோவை: கோவை அருகே, கல்லால் தாக்கி 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், உடன் சென்ற நண்பர்களான இரு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர். கோவையை அடுத்த இருகூர் நியூகாலனியை சேர்ந்தவர் பாரதிராஜா.

இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 7-ம் வகுப்பு படித்துள்ள மூத்த மகன் ரித்தீஷ் (13) கடந்த 16-ம் தேதி நண்பர்களான 15 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் இருவருடன் இருகூர் மாசாணி அம்மன் கோயில் அருகேயுள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், ரித்தீஷுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், நாங்கள் வாய்க்காலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார், அவருடன் ரித்தீஷ் சென்று விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுவன் ரித்தீஷ் கடத்திச் செல்லப்பட்டி ருக்கலாம் என்ற அச்சத்தில் பெற்றோர் சி்ங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் சிறுவன் செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் ரித்தீஷுடன் சென்ற அவரது நண்பர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களிடம் போலீஸார் விசாரி்த்தபோது, முன்னுக்குப் பின், முரணான தகவல்களை தெரிவித்தனர். தீவிர விசாரணையில், இருவரும் சேர்ந்து ரித்தீஷை கொலை செய்துவிட்டு, நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து 15 வயது மற்றும் 13 வயது சிறுவர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘நண்பர்களான 3 பேரும் சேர்ந்து வாய்க்காலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் 15 வயது சிறுவன், அங்கு கிடந்த காலி பாட்டிலை எடுத்து ரித்தீஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

அவர் மயங்கி விழுந்ததும் தலையில் கல்லை தூக்கி போட்டதில், ரித்திஷ் உயிரிழந்தார். பின்னர் 2 பேரும் வீட்டுக்கு வந்துவிட்டனர். உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை நடந்ததை உடன் இருந்து பார்த்ததுடன், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததால் 13 வயதான சிறுவனும் கைது செய்யப் பட்டார்’’ என்றனர்.

மற்றொரு கொலை

அரியலூரைச் சேர்ந்தவர் சரவணன் (45). சூலூர் அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சூலூர் ஆச்சான்குளம் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான நீலாம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

போலீஸார் கூறுகையில், “சரவணன் உட்பட மூன்று பேர் சம்பவத்தன்று குளக்கரைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மற்ற இருவரும் சேர்ந்து சரவணனை கல்லால் தாக்கி கொன்று விட்டு தப்பியி ருக்கலாம் எனத் தெரிகிறது. தலைமறைவானவர்களை தேடி வருகிறோம்” என்றனர்.

<div class="paragraphs"><p>கொலை செய்யப் பட்ட ரித்தீஷ். </p></div>
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறையால் மதிப்பெண் குறைகிறதா? - சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in