சென்னை | பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை | பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: ​பாஸ்போர்ட் அலு​வல​கத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

வடபழனி ஆற்​காடு சாலை பானு​மதி தெரு​வில் மண்டல பாஸ்​போர்ட் அலு​வல​கம் உள்​ளது. இந்த அலு​வலக மின்​னஞ்​சல் முகவரிக்​கு, மின்​னஞ்​சல் நேற்று முன்​தினம் இரவு வந்​தது.

அதில் அந்த அலு​வல​கத்​தில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், அது சிறிது நேரத்​தில் வெடிக்​கும் என்​றும் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து, அலு​வலக ஊழியர்​கள் அளித்த தகவலின் பேரில் கே.கே.நகர் போலீ​ஸாரும், வெடிகுண்டு கண்​டறி​யும் நிபுணர்​களும் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று தீவிர சோதனை​ நடத்தினர். ஆனால் அங்கு எந்த வெடிபொருளும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

இதனால் வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​துடன் அந்த மின்​னஞ்​சல் வந்​திருப்​பது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக கே.கே.நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்​துகின்​றனர்.

சென்னை | பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இளைஞர் உயிரிழப்புக்கு போதை ஊசி காரணமா? - கொடுங்கையூர் போலீஸார் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in