போதை பொருளாக வலி நிவாரண மாத்திரைகள் மொத்தமாக விற்பனை: பிஹார் மருந்துக் கடை உரிமையாளர் கைது

போதை பொருளாக வலி நிவாரண மாத்திரைகள் மொத்தமாக விற்பனை: பிஹார் மருந்துக் கடை உரிமையாளர் கைது
Updated on
1 min read

சென்னை: ​போதைப் பொருளாக வலி நிவாரண மாத்திரைகளை மொத்​த​மாக விற்​பனை செய்த பிஹார் மருந்து கடை உரிமை​யாளரை, சென்னை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்றும் விற்​பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தனிப்​படை போலீ​ஸார், தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக, கொடுங்​கையூர் போலீ​ஸார், கடந்த மாதம் 19-ம் தேதி இரவு, கொடுங்​கையூர் ஆர்​.ஆர். நகரில் கண்​காணித்​தனர். அப்​போது, அங்கு சந்​தேகத்​திற்​கிட​மாக நின்​றிருந்த சென்​னையைச் சேர்ந்த பிர​வீன்​ கு​மார் (23), அரவிந்த் (27), ரஞ்​சித் (28) உள்பட 8 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.

இதில், அவர்​கள் வலி நிவாரண மாத்​திரைகளை போதைப் பொருளாக விற்​பனை செய்​தது தெரிந்​தது. இதையடுத்​து, அந்த 8 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

மேலும், முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பிஹார் மாநிலத்​தில் உள்ள மருந்​துக் கடை​யில் இருந்து உடல்​வலி நிவாரண மாத்​திரைகளை மொத்​த​மாக வாங்கி வந்​து, சென்​னை​யில் விற்​பனை செய்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, பிஹார் விரைந்த சென்னை தனிப்​படை போலீ​ஸார் அங்​குள்ள அராரியா மாவட்​டம், அராரியா டவுன் பகுதி சென்று அங்கு மருந்​துக் கடை நடத்தி வந்த பெரோஸ் ரியா (46) என்​பவரை கைது செய்​தனர்.

இவர்​தான் வலி நிவாரண மாத்​திரைகளை சட்ட விரோத​மாக சென்​னைக்கு கடத்த கொடுத்​துள்​ளார். இதையடுத்​து, அவரை சென்னை அழைத்து வந்து சிறை​யில் அடைத்​தனர். இவரது மகன் பகாத் ரிஷா (20), ஏற்​க​னவே சட்​ட​விரோத மாத்​திரை விற்​பனைக்​காக, பிஹார் மாநில போலீ​ஸார் அண்​மை​யில்​ கைது செய்தனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

போதை பொருளாக வலி நிவாரண மாத்திரைகள் மொத்தமாக விற்பனை: பிஹார் மருந்துக் கடை உரிமையாளர் கைது
சென்னை | போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in