பெரியபாளையம் அருகே லாரி மீது ஆட்டோ மோதி விபத்து: சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

உயிரிழந்த ராதா, பூங்கொடி, கோகுல், தனலட்சுமி

உயிரிழந்த ராதா, பூங்கொடி, கோகுல், தனலட்சுமி

Updated on
1 min read

திரு​வள்​ளூர்: சென்னை கொடுங்​கையூர், தியாக​ராய நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் லோக​நாதன்​(42) ஆட்டோ ஓட்​டுந​ரான இவர் தனது மனைவி பூங்​கொடி(39) மகள் தனலட்​சுமி(10) மாமி​யார் ராதா(65), மைத்​துனரின் மகன்​களான கோகுல்​(10), பிர​சாந்த்​(15) ஆகியோ​ருடன் ஆட்​டோ​வில், பெரிய​பாளை​யம் பவானி அம்​மன் திருக்​கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் இரவு ஆட்​டோ​வில் வந்து கொண்​டிருந்​தார்.

சென்​னை-பெரிய​பாளை​யம் நெடுஞ்​சாலை​யில் பனப்​பாக்​கம் கிராமத்​தில், எம்​டிசி நகர் பேருந்து நிறுத்​தம் அருகே ஆட்டோ வந்​த​போது முன்​னால் சென்ற அடை​யாளம் தெரி​யாத லாரி​யின் மீது கண்​ணிமைக்​கும் நேரத்​தில் ஆட்டோ மோதி விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் பூங்​கொடி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

பெரிய​பாளை​யம் போலீ​ஸார் விரைந்து வந்​து, படு​காயமடைந்த மற்​றவர்​களை மீட்டு 108 ஆம்​புலன்ஸ் மூலம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு அனுப்பி வைத்​தனர். ஆனால், ராதா மற்​றும் கோகுல் மருத்​து​வ​மனை செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர். தனலட்சுமி நேற்று மாலை உயிரிழந்தார்.

மற்​றவர்​களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்​து, மேல் சிகிச்​சைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். உயி​ரிழந்த 4 பேரின் உடலை​யும் போலீ​ஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும் இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விபத்​துக்கு காரண​மான வாக​னத்​தைத் தேடி வரு​கின்​றனர். இந்த விபத்து அப்​பகு​தி​யில் பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.

<div class="paragraphs"><p>உயிரிழந்த ராதா, பூங்கொடி, கோகுல், தனலட்சுமி</p></div>
நேபாளத்தில் மாயமான 49 தமிழர்களின் நிலை என்ன? - சீன அரசிடமிருந்து தகவல் பெற்றுத் தர வேண்டும்: டிராவல் ஏஜென்சி நிர்வாகி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in