கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தவெக இளைஞர் மீது தாக்குதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தவெக இளைஞர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக இரு​வரை போலீ​ஸார் கைது செய்து விசாரிக்​கின்​றனர்.

சென்னை ஓட்​டேரி எஸ்​.எஸ்​.புரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சாலமன் (26) தவெக உறுப்​பினர் என கூறப்​படு​கிறது. இவர் தனது உறவினரை நேற்று முன்​தினம், கீழ்​ப்பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்து வந்​தார். அப்​போது சாலமனின் செல்போனுக்கு அழைப்பு வந்​தது. அதில் விஜய் நடித்த திரைப்பட பாடல் ரிங்​டோ​னாக ஒலித்​தது.

அப்போது, அங்கு வந்த இரு​வர், சாலமனிடம், “ஏன் விஜய் பாடலை ரிங்​டோ​னாக வைத்​துள்​ளாய்?” என கேட்டு தகராறு செய்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால் இருதரப்​புக்​கும் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஆத்​திரமடைந்த போதை ஆசாமிகள் இரு​வரும் சாலமனை தாக்கி உள்​ளனர்.

சம்​பவம் குறித்து சாலமன் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் நடத்திய விசா​ரணை​யில், தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​கள் சேத்​துப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்த அம்​பேத்​கர் (35) மற்​றும் செந்​தில்​கு​மார் (40) என்​பது தெரிய​வந்​தது. இதில், அம்​பேத்​கர் திமுக ஆதர​வாளர் எனவும் செந்​தில்​கு​மார் நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தில் பணி​யாற்றி வரு​வ​தாக​ கூறப்​படு​கிறது. போலீ​ஸார் இரு​வரை​யும்​ கைது செய்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு: ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற தவறை மீண்டும் செய்கிறதா காங்கிரஸ் ?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in