எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு: இளைஞர், சிறுவன் கைது

எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு: இளைஞர், சிறுவன் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் காவல் உதவி ஆய்​வாளரை அரி​வாளால் வெட்​டிய இளைஞர் மற்​றும் சிறு​வனை போலீ​ஸார் கைது செய்​தனர்.

தூத்​துக்​குடி சிலு​வைப்​பட்​டியை சேர்ந்த முரு​கேசன் மகன் கார்த்​திக் என்ற நண்டு (22). இவருடைய நண்​பர் 17 வயது சிறு​வன். இவர்​கள் இரு​வர் மீதும் தாள​முத்து நகர் காவல் நிலை​யத்​தில் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மேலும், கடந்த 3 நாட்​களுக்கு முன்​னர் ஒரு வீட்​டின் மீது பெட்​ரோல் குண்டு வீசிய சம்​பவத்​தில் இவர்​கள் இரு​வரும் தேடப்​பட்டு வந்​தனர்.

இந்நிலையில், அம்பேத்கர்நகரில் இருவரும் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் (38), தலைமைக் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், சையது ஈசாக் ஆகியோர் அம்பேத்கர் நகருக்கு நேற்று காலை சென்று தேடினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த இருவரும் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது, அரிவாள் மற்றும் வாளால் போலீஸாரை தாக்கினர்.

இதில், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜுக்கு உடலில் 2 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தலைமைக் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், சையது ஈசாக்கை கீழே தள்ளிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். அப்போது, சாலையோர பாலத்தில் இருந்து குதித்தபோது கார்த்திக்கின் வலது கால் எலும்பு உடைந்தது. சிறுவனின் இடது கை முறிந்துள்ளது.

இதுகுறித்து, உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக் என்ற நண்டு மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு: இளைஞர், சிறுவன் கைது
“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” - பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in