ஏடிஎம் இயந்திர பணம் ரூ.10 லட்சம் கையாடல் ஊழியர் தலைமறைவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Updated on
1 min read

கோவை: கோவை​ பி.கே.புதூரைச் சேர்ந்​தவர் ராஜ்கு​மார். இவர், தனி​யார் வங்கி மூலம் கோவை​யில் பராமரிக்​கப்படும் ஏடிஎம் இயந்​திரங்​களுக்கு பணம் நிரப்​பும் பணி மேற் கொண்டுவரு​கிறார். இவரிடம், திருச்சி மேல அம்​பி​காபுரம் பகு​தி​யைச் சேர்ந்த கதிர்​வேல் பிச்​ச​முத்து என்​பவர் பணி​யாற்றி வரு​கிறார். இவர் பணத்தை ஏடிஎம் இயந்​திரங்​களில் நிரப்​பி​விட்டு வரு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், கடந்த மாதம் 30-ம் தேதி ஏடிஎம்மில் நிரபப் ரூ.10 லட்​சத்து 20 ஆயிரத்துடன் சென்றவர் தலைமறைவானார். இது குறித்து ராஜ்கு​மார், குனிய​முத்தூர் போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். அதன்​பேரில், மோசடி உள்​ளிட்ட இரு பிரிவு​களின்​கீழ் கதிர்​வேல் பிச்​சை​முத்​து, அவரது மனைவி ஐஸ்​வர்யா ஆகியோர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து ஐஸ்​வர்​யாவை கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள கதிர்​வேல் பிச்​சை​முத்​துவை தேடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>மாதிரிப் படம்</p></div>
வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in