பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இடைக்கால பாதிப்பு மண்டலமாக 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இடைக்கால பாதிப்பு மண்டலமாக 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்
Updated on: 
1 min read

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்​தின் இடைக்​கால பாதிப்பு மண்​டல​மாக, 36 சர்வே எண்​களில் உள்ள 128.19 ஹெக்​டேர் பரப்பு அடை​யாளம் காணப்​பட்​டுள்​ள​தாக அரசு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பள்ளிக்கரணை ராம்​சார் சதுப்பு நிலம் தொடர்​பாக தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை மேற்​கொண்ட தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யம், பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்​தவொரு கட்​டு ​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது என தமிழக அரசுக்கு கடந்​தாண்டு செப்​டம்​பரில் உத்​தர​விட்​டிருந்​தது.

அந்த உத்​தர​வுப்​படி சென்னை பெருநகர வளர்ச்சி குழு​மம் (சிஎம்​டிஏ), பள்​ளிக்​கரணை சதுப்பு நிலப்​பகு​தி​களைச் சுற்றி சுமார் ஒரு கிமீ சுற்​றளவுக்கு

எந்​தவொரு கட்​டு​மானங்​களுக்​கும் அனு​மதி வழங்க முடி​யாது என மறுப்பு தெரி​வித்து கடந்த 2025 அக்​டோபரில் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தர​வால் பள்​ளிக்​கரணை பகு​தி​களை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் அடுக்​கு​மாடி கட்​டு​மானப்​பணி​கள் முழு​மை​யாக ஸ்தம்​பித்​துள்​ள​தாகக் கூறி ரியல் எஸ்​டேட் நிறு​வனங்​களின் கூட்​டமைப்​பான கிரெ​டாய் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அதில், எவ்​வித அறி​வியல் பூர்​வ​மான ஆய்​வும் மேற்​கொள்​ளாமல் பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்​தவொரு கட்​டு​மானங்​களும் கட்​டக்​கூ​டாது என தேசிய பசுமை தீர்ப்​பா​யம் பிறப்​பித்​துள்ள உத்​தரவு சட்​ட​விரோத​மானது என்​ப​தால் அந்த உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும் எனக் கோரி​யிருந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள் முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மாநில சதுப்பு நில ஆணை​யம் தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் பி.​வி. பாலசுப்​பிரமணி​யம், ‘‘பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தைச் சுற்​றி​யுள்ள இடைக்​கால பாதிப்பு மண்​டல​மாக வரையறுக்​கும் வகை​யில், 36 சர்வே எண்​களில் உள்ள 128.19 ஹெக்​டேர் பரப்பு அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது’’ என தெரி​வித்​தார்.

அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பான அறிக்​கையை அக்​.14-க்​குள் தாக்​கல் செய்ய வேண்​டுமென மாநில சதுப்பு நில ஆணை​யத்​துக்கு அறி​வுறுத்​தினர். அந்த அறிக்​கையை பரிசீலித்து அக்​.14 அன்று இந்த வழக்​கில் உரிய உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படும் என தெரி​வித்து வி​சா​ரணையை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

அன்புமணி வலியுறுத்தல்

பள்​ளிக்​கரணை சதுப்பு நிலப் பகு​தி​யில் பாமக தலை​வர் அன்​புமணி நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தில் 3 கிமீ நீளத்​துக்கு சுற்​றுச்​சுவர் மற்​றும் நடை​பாதை அமைக்​கும் பணி​களை தமிழக அரசு தீவிர​மாக மேற்​கொண்டு வரு​கிறது.

பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை வரையறை செய்ய வேண்​டும். தடுப்​புச் சுவர், நடை​பாதை அமைக்​கும் திட்​டத்தை நிறுத்த வேண்​டும். இல்​லை​யென்​றால், எனது தலை​மை​யில் மிகப்​பெரிய போ​ராட்​டம் நடை​பெறும்’’ என்றார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இடைக்கால பாதிப்பு மண்டலமாக 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.42 லட்சம் நலத்திட்ட உதவி: அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in