சென்னை | வருமானத்துக்கு அதிகமாக 372% சொத்து சேர்த்த பெண் காவல் ஆய்வாளர்: லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு

ராஜலட்சுமி

ராஜலட்சுமி

Updated on
1 min read

சென்னை: ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் துறை பாலியல் தடுப்​புப் பிரிவில்​(1) ஆய்​வாள​ராக பணிபுரிகிறார். இவர் திரு​மங்​கலம், வெல்​கம் காலனி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கிறார்.

இவர் பணி​யின்​போது தனது அதி​காரத்தை தவறாகப் பயன்​படுத்தி முறை​கே​டாக அதி​கள​வில் பணம் சம்​பா​தித்து வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதை அடிப்​படை​யாக வைத்து கடந்த 13-ம் தேதி இவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

முடி​வில் பல்​வேறு சொத்​துகள் தொடர்​புடைய முக்​கிய ஆவணங்​களை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பறி​முதல் செய்து கையோடு எடுத்​துச் சென்​றனர். இதன் தொடர்ச்​சி​யாக வருமானத்தை விட 372% அதிக சொத்து சேர்த்​த​தாக ஆய்​வாளர் ராஜலட்​சுமி மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

அதில், “குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான ஆய்​வாளர் ராஜலட்​சுமி மது விலக்கு அமலாக்​கப் பிரிவு, பொருளா​தார குற்​றப்​பிரிவு, பாலியல் தடுப்​புப் பிரிவு, போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போன்ற முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​த​போது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்​து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான கால​கட்​டத்​தில், அசை​யும் மற்​றும் அசையா சொத்​துக்​களை வாங்கி குவித்​திருந்​துள்​ளார்.

1999-ல் நேரடி எஸ்​ஐ-​யாக பணி​யில் சேர்ந்த ராஜலட்​சுமி, ஆய்​வாள​ராக பதவி உயர்வு பெற்ற பிறகு, 2010 முதல் சென்னை நகருக்​குள் மட்​டுமே முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​துள்​ளார். எனவே அவரது சட்​ட​விரோத வரு​வாயைக் கணக்​கிட 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான காலம் கணக்​கிடப்​பட்​டது.

இந்த காலக்​கட்​டத்​தில் அவர் வரு​மானத்தை விட ஊழல் மற்​றும் சட்​ட​விரோத வழிகளில் ரூ.5.42 கோடிக்கு சொத்​துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​களின் பெயரிலும் வாங்​கி​யுள்​ளார்.

அதாவது வரு​மானத்தை விட 372% அதி​கள​வில் சொத்து சேர்த்​துள்​ளார். இதையடுத்​து, அவர் மீது ஊழல் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>ராஜலட்சுமி</p></div>
சென்னை | இளம் பெண்ணிடம் போட்டோ ஷூட் எடுப்பதாக நகை திருடிய பிசியோ தெரபிஸ்ட் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in