ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பல மாநிலங்களில் வயதானவர்களிடம் பண மோசடி செய்த ஆந்திர இளைஞர் கைது

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பல மாநிலங்களில் வயதானவர்களிடம் பண மோசடி செய்த ஆந்திர இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்க உதவுவது​போல வயதானவர்​கள், மாற்​றுத் திற​னாளி​களை குறி​வைத்து பல மாநிலங்​களில் பண மோசடி​யில் ஈடு​பட்ட ஆந்​திர இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மதுரை மாவட்​டத்​தைச் சேர்ந்த பார்​வைத்​திறனற்ற மாற்​றுத் திற​னாளி பாண்​டியன் (61). இவர் வேலை நிமித்​த​மாக சென்னை வந்து கடந்த 31-ம் தேதி சென்னை பல்​கலைக்​கழக வாளகத்​தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்​கச் சென்​றார்.

அப்​போது அங்கு வந்த நபர் ஒரு​வர் பாண்​டியனிடம் பணம் எடுக்க உதவி செய்​வ​தாகக் கூறி ஏடிஎம் கார்டு மற்​றும் பின் நம்​பரை வாங்கி ஏடிஎம் இயந்​திரத்​தில் போட்​டு​விட்​டு, பணம் இல்லை என்று கூறி அவரை ஏமாற்​றி, மறைத்து வைத்​திருந்த மற்​றொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்​பி​யுள்​ளார்.

பின்​னர் அந்த நபர் பாண்​டியனின் ஏடிஎம் கார்டை அரு​கில் உள்ள வேறு ஏடிஎம் மையத்​தில் பயன்​படுத்தி ரூ.23,500-ஐ எடுத்​த​போது, பாண்​டியனின் செல்​போனுக்கு குறுஞ்​செய்தி வந்​தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இந்த விவ​காரம் தொடர்​பாக அண்​ணாசதுக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக வங்கி ஏடிஎம் மையத்​தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர். இதில் முதி​ய​வரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடு​பட்​டது ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த சிடா​தாலா சுனில் (27) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரிட​மிருந்து ஒரு செல்​போன், 79 ஏடிஎம் கார்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. போலீ​ஸாரின் விசா​ரணை​யில், சிடா​தாலா சுனில் ஆந்​திர மாநிலத்​தில் பெட்​ரோல் பங்​க்கில் வேலை செய்து வந்​துள்​ளார்.

இவர் ஏடிஎம் மையங்​களில் பொது​மக்​கள் மறந்து விட்​டுச்​செல்​லும் ஏடிஎம் கார்​டு​களை எடுத்து வைத்​துக்​கொண்டு பார்​வையற்ற மாற்​றுத் திற​னாளி​கள், வயதானவர்​களைக் குறி​வைத்து ஏமாற்றி பணத்​தைத் திருடி வந்​தது தெரிந்​தது. இதே​போல பல்​வேறு மாநிலங்​களில் கைவரிசை காட்​டி​யுள்​ளார் எனத் தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பல மாநிலங்களில் வயதானவர்களிடம் பண மோசடி செய்த ஆந்திர இளைஞர் கைது
சென்னை | காவல் ஆணையர் அலுவலகத்தில் தீப்பிடித்து ஆவணங்கள் சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in