பண்ருட்டி அருகே முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு: மருமகள் உள்ளிட்ட 4 பேர் கைது

ஜெயப்​பிரி​யா, மணி​கண்​டன், பார்த்திபன், குபேந்திரன்

ஜெயப்​பிரி​யா, மணி​கண்​டன், பார்த்திபன், குபேந்திரன்

Updated on
1 min read

விருத்தாசலம்: பண்ருட்டி அருகே முதி​ய​வரை பெட்​ரோல் ஊற்றி எரித்​துக் கொலை செய்ய முற்​பட்ட அவரது மரு​மகள் உள்​ளிட்ட 4 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

கடலூர் மாவட்​டம், பண்ருட்டி அருகே உள்ள மாளி​கம்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்​தவர் ராஜேந்​திரன்​(64). இவர் நேற்று முன்​தினம் இரவு கந்​தன் என்​பவரது பைக்​கில் மாளி​கம்​பட்டு சாலை​யில் சென்று கொண்​டிருந்​த​போது, அவர்​களைப் பின் தொடர்ந்து ஒரு காரில் வந்த மர்ம நபர்​கள் பைக்கை மறித்​து, ராஜேந்​திரனைக் கீழே இறக்​கி, அவர் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​து​விட்​டு, அங்​கிருந்து தப்​பியோடினர்.

தீக்​காயமடைந்த ராஜேந்​திரனை, கந்​தன் உள்​ளிட்ட சிலர் மீட்​டு, பண்ருட்டி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக கடலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். தகவலறிந்து வந்த கடலூர் எஸ்பி ஜெயக்​கு​மார் சம்பவ இடத்​தைப் பார்​வை​யிட்​டார்.

இச்​சம்​பவம் தொடர்​பாக ராஜேந்​திரன் மகள் ஜெயந்தி கொடுத்த புகாரின்​பேரில் காடாம்​புலியூர் காவல் நிலை​யத்​தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலை​மை​யில், 4 தனிப் படைகள் அமைக்​கப்​பட்​டன.

சம்பவ இடத்​தில் இருந்த சிசிடிவி கேம​ராக்​களை உடனடி​யாக ஆய்வு மேற்​கொண்​டு, குற்​றச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு​வ​ரான கார் ஒட்​டுநர் பார்த்​திபனை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிடம் மேற்​கொண்ட விசா​ரணை​யில், ராஜேந்​திரன் மீது பெட்​ரோல் ஊற்​றியது பண்ருட்டியைச் சேர்ந்த மணி​கண்​டன், குபேந்​திரன் என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து பண்ருட்டி காம​ராஜர் நகரைச் சேர்ந்த மணி​கண்​டன்​(39), சத்​தி​யமூர்த்தி தெரு, குபேந்​திரன்​(29), கார் ஓட்​டுநர் சித்​திரைச்​சாவடி பார்த்​திபன்​(28), ராஜேந்​திரனின் மரு​மகள் ஜெயப்​பிரி​யா(28) ஆகிய 4 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், ராஜேந்​திரனின் மரு​மகளான ஜெயப்​பிரி​யா​வுக்​கும் தீ வைத்து எரித்து தப்​பியோடிய மணி​கண்​டன் என்​பவருக்​கும் கூடா நட்பு இருந்து வந்​துள்​ளது. இதனை ராஜேந்​திரன் கண்​டித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால் ராஜேந்​திரன் மீது கோபத்​தில் இருந்த ஜெயப்​பிரி​யா, மணி​கண்​டன் இரு​வரும் குபேந்​திரன், பார்த்​திபனுடன் சேர்ந்து ராஜேந்​திரனை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்​றது தெரிய​வந்​துள்​ளது. போலீ​ஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>ஜெயப்​பிரி​யா, மணி​கண்​டன், பார்த்திபன், குபேந்திரன்</p></div>
இன்னொரு அறிவொளி இயக்கத்தை நடத்த வேண்டும்: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in