

மதுரை: மதுரை மாநகரில் ஜாலி ரெய்டு சென்று ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிட்ட 7 இளைஞர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், அவர்களது விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மாநகரில் வாகன விபத்து களை குறைத்து, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதனடிப் படையில், போலீஸார் வாகனத் தணிக்கை, விழிப்புணர்வு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி சில இளைஞர்கள் மதுரை - புதுநத்தம் ரோடு மற்றும் பை பாஸ் சாலையில் தங்களது இருசக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கி ரதையாகவும் முன்பக்க சக்கரங்களை தூக்கிக்கொண்டு (வீலிங்) சாகச ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸாகவும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் (20), அழகுமாணிக்கம் (20), இளமனூர் பகுதி மோகன்குமார் (20), வடக்குமாசி வீதி விவேக் (20), கருப்பாயூரணி கபிலேஷ் (19), தெற்குவாசல் நந்தா (22) உட்பட 7 பேரிடமிருந்து ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து வசூலித்தனர்.
மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமுறை களுக்கு உட்பட்டு வாக னங்களை இயக்க வேண்டும்.
இதுபோன்று ரீல்ஸ் வெளி யிடுவதற்காக சாலைகளில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.