திருட்டு வழக்கில் கைதான இளைஞர் ஆணியை விழுங்கியதால் அதிர்ச்சி

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை
Updated on: 
1 min read

கடலூர்: நெல்லிக்குப்பம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் முருகதாஸ் (41), தமிழ் கருமாரத் தெருவைச் சேர்ந்தவர் பாரதி (56). இருவரும் கடந்த 7-ம் தேதி தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு, தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

அப்போது மர்ம நபர்கள் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து, முருகதாஸ் வீட்டில் 6 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி, ரூ.10,000 பணம் ஆகியவற்றையும், பாரதி வீட்டில் 17 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி, ரூ.10,000 பணம் ஆகியவற்றையும் திருடிச் சென்றனர். நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை அடிப்படையில், திருட்டு வழக்கில் தொடர்புடையை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரை கடலூர் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஆணியை விழுங்கி விட்டதாக நீதிபதியிடம் சந்தோஷ்குமார் தெரிவித்தார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் ஆணியை விழுங்கியது உறுதியானது. இதையடுத்து, சந்தோஷ்குமார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருட்டு வழக்கில் கைதான இளைஞர் ஆணியை விழுங்கியதால் அதிர்ச்சி
“தொழில் வளத்தை நாசமாக்கியதே 6 மாத கால விஜய் அரசின் சாதனை” - பழனிசாமி சாடல்

X