ஆண்டிபட்டி அருகே கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

தேனி: ஆண்​டிபட்டி அருகே பேருந்​துக்​காக காத்​திருந்​தவர்​கள் மீது கார் மோதி​ய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்​டம் நாராயணசடனம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அஜித்​கு​மார் (28). இவர், நேற்று தேனி​யில் இருந்து மதுரை நோக்கி அதிவேக​மாக காரை ஓட்​டிச் சென்​றார்.

தேனி மாவட்​டம் ஆண்​டிபட்டி அருகே உள்ள க.விலக்கு நான்கு சாலை சந்​திப்பு அருகே சென்​ற​போது, எதிர்​பா​ராத​வித​மாக ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார், சாலை​யோரம் பேருந்​துக்​காக காத்​திருந்த 4 பேர் மீது அடுத்​தடுத்து பயங்​கர​மாக மோதி​யது.இந்த விபத்​தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கண்​டமனூர் வேலா​யுத​புரத்தைச் சேர்ந்த பால்​ராஜ்(75), செல்​வம் (50), ஏரதி​ மக்​காள்​பட்​டியைச் சேர்ந்த மாரி​யம்மாள் (60), மதுரை அரசரடியைச் சேர்ந்த பாக்​கியலட்​சுமி (39) ஆகியோரை தேனி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பால்​ராஜ், செல்​வம், மாரி​யம்​மாள் ஆகியோர் உயி​ரிழந்​தனர். பாக்​கியலட்​சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, காரை ஓட்டி வந்த அஜித்​கு​மாரைக் கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வருகிறது.

ஆண்டிபட்டி அருகே கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
“மிகப் பெரிய தோல்வியை பாஜகவும், அதிமுகவும் அடையப் போகிறது” - முதல்வர் ஸ்டாலின் சூளுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in