பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

சென்னை | இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ.31 லட்சம் ஹவாலா பணம் இளைஞரிடம் விசாரணை

Published on

சென்னை: இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.31 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை வியாசர்பாடி காவல்நிலைய தலைமைக் காவலர் சிவா,முதல்நிலை காவலர் ராஜேஷ் இருவரும் வியாசர்பாடி ஏ. ஏ. ரோடு லைப் ஸ்டைல் அப்பார்ட்மென்ட் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது வாகனத்தில் சீட்டுக்கு அடியில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதற்கு ஆவணங்கள் ஏதும் இல்லை.

ஹவாலா பணம் வைத்திருந்ததாக<br />கைதான தேவராஜ்
ஹவாலா பணம் வைத்திருந்ததாக
கைதான தேவராஜ்

இதையடுத்து அது ஹவாலா பணம் என்பது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த மாதவரத்தைச் சேர்ந்த தேவராஜ் (30) என்பவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, ரத்தன் பஜார் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளதாகவும் செல்போன் வித்த பணம் என்றும் அவர் கூறினார். இதன் உண்மை தன்மை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in