சென்னை | வேலைக்கு போக சொன்ன மனைவி கொலை: கணவன் கைது

சென்னை | வேலைக்கு போக சொன்ன மனைவி கொலை: கணவன் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி துரை (56). இவரது மனைவி இந்திராணி (48), தேரடி சந்திப்பில் உள்ள ஒருபேக்கரியில் பணிபுரிந்து வந்தார். துரை மதுபோதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்குச்செல்லாமல் சுற்றித்திரிந்தார் என்று் கூறப்படுகிறது.

இதை மனைவி கண்டித்து, ஒழுங்காக வேலைக்குச் செல்ல அறிவுறுத்தினாராம். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடிகுடும்பச் சண்டை ஏற்படுமாம். இந்நிலையில்,நேற்று காலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியநிலையில் துரை உலக்கையை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் இந்திராணி அதே இடத்தில் இறந்தார்.

திருவொற்றியூர் போலீஸார் இந்திராணி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in