கள்ளக்குறிச்சி அருகே நரிமேடு பகுதியில் பெண்‌ மற்றும் 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

உயிரிழந்த தாய் வளர்மதி
உயிரிழந்த தாய் வளர்மதி
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கணவனை இழந்த பெண் மற்றும் 11 வயது சிறுவன் 8 மாத கைக் குழந்தை ஆகிய 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35). இவரது கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் வளர்மதி ஆட்டோ மூலமாக காய்கறி வியாபாரம் செய்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ‌இந்த நிலையில் வளர்மதி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளர்மதி வீட்டிற்குள் சென்ற போது, வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர்‌ கழுத்தறுத்துக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து மூவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து நேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி (பொறுப்பு) பகலவன் இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in