Published : 18 Mar 2023 06:08 AM
Last Updated : 18 Mar 2023 06:08 AM

விழுப்புரம் | செவிலியர் கல்லூரி மாணவி கொலை: விக்கிரவாண்டி அருகே காதலன் கைது

தரணி, கணேஷ்ராஜ்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தைச் சேர்ந்த சுகன் மகள் தரணி (19). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டயப்படிப்பு படித்து வந்தார். இவரும் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ்ராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இடையில் கணேஷ் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரில் கூலி வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடால் கடந்த சில நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை தரணி தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வந்தார். அங்கு மறைந்திருந்த கணேஷ்ராஜ், தரணியின் பின்பக்கமாக சென்று அவரை மடக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடினார்.

தரணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது தரணி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கணேஷ்ராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x