சென்னையில் 10 கிலோ கஞ்சாவுடன் வடமாநில பெண் கைது

சென்னையில் 10 கிலோ கஞ்சாவுடன் வடமாநில பெண் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை மடிப்பாக்கம் கீழ்க் கட்டளை பேருந்து நிறுத்தம் அருகே சிலர் கஞ்சா கடத்தி வருவதாக புனித தோமையர் மலை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த வட மாநில பெண்ணை போலீஸார் பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையையும் போலீஸார் சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண் ஒடிசா மாநிலம் கோர்டா மாவட்டத்தை சேர்ந்த கீதா (35) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in