சென்னை | காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது

சென்னை | காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்தவர் ஷாலினி (36). இவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார். ஷாலினி வீட்டுக்கு அவரது அண்ணன் சதீஷ்(38) கடந்த 22-ம் தேதி சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்த 2 பவுன் நகை மாயமாகிவிட்டதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் ஷாலினி புகார் அளித்தார். பின்னர், புகார் திரும்ப பெறப்பட்டது.

இதனால் கோபமடைந்த சதீஷ் உள்ளிட்டோர் ஷாலினி வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியுள்ளனர். பின்னர், அவரை சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வேளச்சேரி போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேளச்சேரி ஆய்வாளர் சந்திரமோகன், சதீஷை காவல் நிலையம் அழைத்து வரும்படி உதவி ஆய்வாளர் அருணுக்கு உத்தரவிட்டார். வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருண், சதீஷை அழைத்தபோது, அவரை அனுப்பாமல் வீட்டில் இருந்தவர்கள் தகராறு செய்துள்ளனர்.

இந்நிலையில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு சதீஷ் தப்பியோட முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in