Published : 04 Feb 2023 06:12 AM
Last Updated : 04 Feb 2023 06:12 AM
புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு பூபாலன் நகரைச் சேர்ந்தவர் உலகநாதன் (49). மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர், தற்போது குடும்பத்தினருடன் வியா பாரம் செய்து வரும் நிலையில், பணம் முதலீடு செய்ய ஆன்லைன் தளங்களை அணுகியுள்ளார்.
அதன்ஒரு பகுதியாக, பிட்காயின் முதலீடு தொடர்பாக சில தளங்களில் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளனர். அதை நம்பிய உலகநாதன் ரூ.15 லட்சம் செலுத்தியுள்ளார்.அதன் பிறகு அச்செய லியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, எந்த பதிலும் வரவில்லை. அதிர்ச்சியடைந்த உலகநாதன் இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர்7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நல்லாம் சத்தியநாராயணா (53). இவர, ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் பண இரட்டிப்பு தொடர்பான வர்த்தகம் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதை யடுத்து, அவர் ரூ.3.65 லட்சம் பணம் டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகு எந்த பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஓடிபி கேட்டு பண மோசடி: புதுச்சேரி பிருந்தாவனம் போஸ்ட் ஆபீஸ் வீதியைச் சேர்ந் தவர் சரோஜா. இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதை அவர் கிளிக் செய்ததும் ஓடிபி கேட்ட நிலையில், விவரம் தெரியாமல், அவர் அந்தஎண்ணை அனுப்பியதாக தெரிகிறது.
அதன்பிறகு சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சரோஜா இதுபற்றி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் ரெட்டியார் பாளையம் பகுதியைச் சேர்ந்த லாவன்யா (23) என்ற பெண்ணின் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆன்லைன் தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரம் வந்துள்ளது. ‘ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தினால் அடுத்த சில நிமிடங்களில் ரூ.4 ஆயிரமாக கிடைக்கும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
முதலில் லாவண்யா ரூ. 2 ஆயிரம் டெபாசிட் செய்ய, அடுத்தசில நிமிடங்களில் அப்பணம் இரட்டிப்பாக கிடைத்துள்ளது. அதைய டுத்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 748 டெபாசிட் செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பணம் இரட்டிப்பாகவில்லை. பணத்தை இழந்த லாவண்யா ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் முறையிட, போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT