விருதுநகர் | போக்சோ வழக்கில் ஹோட்டல் உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் | போக்சோ வழக்கில் ஹோட்டல் உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (59). இவர் புரோட்டா கடை நடத்தி வந்தார். ஜேசுராஜ் 2020-ல் அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது குறித்த புகாரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து ஜேசுராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் ஜேசுராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் நேற்று தீர்ப்பளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in