போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் 2 நாட்களில் 4,083 பேரிடம் ரூ.48 லட்சம் அபராதம் வசூல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 4,083 வாகனஓட்டிகளிடம் இருந்து 2 நாட்களில் ரூ.48.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வாகன விதிமீறல்களில் ஈடுபட்டு சரியான நேரத்தில் அபராத தொகையை செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது அபராத தொகை நிலுவை விவரங்கள் போக்குவரத்து போலீஸார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு தெரிவித்தும் பலர் அபராத தொகையை செலுத்தாததால், கடந்த 12-ம் தேதி சென்னையில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விதிமீறிய 1,022 பேரிடம் அபராத தொகையாக ரூ.11,28,810 வசூலிக்கப்பட்டது.

சிறப்பு வாகன சோதனை: மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்கும் பொருட்டு கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் சென்னையில் 168 இடங்களில் சிறப்பு வாகன சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. இந்த முகாமில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து நிலுவையில் உள்ள அபராத தொகையை கடன் அட்டை, கியூஆர் குறியீடு, இணையதள கட்டணம் ஆகியவை மூலம் அபராதத் தொகை செலுத்த ஊக்கப்படுத்தப்பட்டது.

இந்த முகாமில் விதிமீறலில் ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூ.48,59,300 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம், மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தினர் அதிகபட்ச அபராதத் தொகையை வசூலித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in