ராஜபாளையம் அருகே 550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த முகவூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடியில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி சேத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சேத்தூர் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், ரூபாய் 3.8 லட்சம் மதிப்புள்ள 530 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்த போலீஸார், அருண்குமாரை கைது செய்தனர். மேலும், புகையிலை சப்ளை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அருண்குமார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in