திருப்பூர் | பெண்ணை ஏமாற்றியதாக காவலர் மீது வழக்கு

திருப்பூர் | பெண்ணை ஏமாற்றியதாக காவலர் மீது வழக்கு
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சண்முகம் (34). இதற்கு முன் இவர், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.

அப்போது, விவாகரத்து பெற்ற 30 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பண மோசடியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதற்கிடையே சண்முகம், காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் தான் அளித்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில், காவலர் சண்முகத்தின் மீது பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in