சங்கராபுரம் அருகே விவசாயி வீட்டில் 114 பவுன் நகைக் கொள்ளை

சங்கராபுரம் அருகே விவசாயி வீட்டில் 114 பவுன் நகைக் கொள்ளை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே விவசாயி வீட்டில் 114 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள்,ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சங்கராபுரத்தை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் சின்ராஜ்.விவசாயி. இவரது மனைவி சித்ரா. கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருமகன்களை பார்ப்பதற்காக இருவரும் சென்னை சென்றனர். நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினர். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த சின்ராஜ், வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆய்வாளர் பாண்டியன் தலைமையில், மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், பீரோக்கள் உடைக்கப்பட்டு, 114 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் திருடு போனதாக சின்ராஜ் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in