பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு - வெளியுறவு அமைச்சக ஓட்டுநர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு - வெளியுறவு அமைச்சக ஓட்டுநர் கைது
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரை தில்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதில், அந்த ஓட்டுநர் பாகிஸ்தானைச் சேர்ந்த பூஜா என்ற பூனம் சர்மாவுக்கு பணத்திற்கு ஈடாக தகவல் மற்றும் ஆவணங்களை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது.

போலீஸாரின் பொறியில் சிக்கிய அந்த ஓட்டுநர் டெல்லி ஜவஹர்லால் நேரு பவனில் இருந்த போது நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இவ்வாறு டெல்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in