மேலூர் அருகே தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: அழைப்பிதழ் தருவதாக ஏமாற்றிய தந்தை, மகள்கள்?

மேலூர் அருகே தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: அழைப்பிதழ் தருவதாக ஏமாற்றிய தந்தை, மகள்கள்?
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை அடித்த தந்தை, மகள்கள் போன்று இருந்த 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலூர் அருகிலுள்ள கீழவ ளவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஹேமலதா (42). இவர்களுக்கு இரு மகள் கள் உள்ளனர். ஒரு மகள் கல்லூரியிலும், மற்றொருவர் பள்ளி யிலும் படிக்கின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவில் டியூசன் சென்றனர். வீட்டில் ஹேமலதா மட்டும் இருந்துள்ளார். அப்போது வயதான ஒருவரும், இரு பெண் களும் வீட்டுக்கு வந்தனர்.

அவர் கள் ஹேமலதாவிடம் ‘‘வெளி நாட்டில் வேலை பார்க்கும் உங்களது கணவர், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சொன்னார்,’’ என கூறினர். அப்போது அவர் தனது கணவர் இதுபற்றி எதுவும் கூறவில்லை என்றார். அப்போது திடீரென மூவரும் சேர்ந்து ஹேமலதாவின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்திரியை ஒட்டியுள்ளனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலி, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம், மொபைல் போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். மேலவளவு போலீஸார் நடத்திய விசாரணையில் திருட வந்தவர்கள் தந்தை, மகள்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in