

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் சென்னையைச் சோ்ந்த ஜிடிஎல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அதே பகுதியைச் சோ்ந்த மல்லிகா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மொபைல் போன் கோபுரத்தை நிறுவியது.
இக்கோபுரத்தின் செயல்பாடு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்நிறு வனத்தின் மேலாளரான சென் னையைச் சேர்ந்த அகிலன் (44) சமீபத்தில் வந்து பார்த்தபோது ரூ.25 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் கோபுரம் மற்றும் மின் சாதனப் பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து திருவாடானை நீதிமன்றத்தில் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.