தேவர் ஜெயந்தி | மதுரையில் 50+ விதிமீறல் வழக்குகள் பதிவு; வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸ் நடவடிக்கை

தேவர் ஜெயந்தி | மதுரையில் 50+ விதிமீறல் வழக்குகள் பதிவு; வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸ் நடவடிக்கை
Updated on
1 min read

மதுரை: தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையில் விதியை மீறியதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் சிக்கிய வாகனங்களும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் துறை தெரிவித்துள்ளது.

மருதுபாண்டியர், பசும்பொன் தேவர் மற்றும் இமானுவேல்சேகரன் போன்ற தலைவர்களின் நினைவு தினத்திற்கு சொந்த வாகனங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும். இது போன்ற நேரத்தில் காவல் துறை, அரசின் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை உள்ளது.

இதன்படி, சில நாட்களுக்கு முன்பு பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவுத்திற்கு சென்றபோது, மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, அந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜையையொட்டி விதிமீறும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், தேவர் குருபூஜையையொட்டி மதுரை நகரில் பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி டூவீலர்களை ஓட்டியதாக 35 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதே போன்ற மதுரை புறநகரிலும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் சிக்கிய வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவுடன் வாகனங்களும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in