

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்திசிலை பகுதியில் பயணியர் நிழற்குடை உள்ளது. கடந்த 2 நாளுக்கு முன்பு, இந்த நிழற்குடையில், மாணவி ஒருவருக்கு, மாணவன் ஒருவன் தாலி கட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த மாணவி 12-ம் வகுப்பு படிப்பதும், தாலி கட்டிய மாணவன் பாலிடெக்னிக் படிப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரம்யா நேற்று காலை இதுதொடரபாக சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த சிறுவனை யும் சிறுமியையும் காவல் நிலையத்திற்கு தனித்தனியே அழைத்து விசாரணை நடத் தினர். இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்குவந்திருந்தனர்.
விசாரணைக்குப் பின் சிறுமியை கடலூரில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் உள்ள பெண்கள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விஷயத்தில், குறிப்பிட்ட மாணவருக்கு உரிய உளவியல் ஆலோசனை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர் வலர்களும், பெற்றோரும் கூறுகையில், "பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ, மாண விகளை நல்வழிபடுத்த வேண்டும். அனைத்து மகளிர்காவல் நிலைய போலீஸார், பள்ளிகளுக்கு சென்று மாணவிகளுக்கு, திருமண வயது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சரியான பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட சமூக நலத்துறையினரும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்