நடிகை அமலாபால் புகாரில் கைதான இளைஞருக்கு ஜாமீன்

நடிகை அமலாபால் புகாரில் கைதான இளைஞருக்கு ஜாமீன்
Updated on
1 min read

நடிகை அமலாபால் திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார். அவருடன் மட்டுமல்லாது அவரது குடும் பத்தினரிடமும் அமலாபால் நெருங்கிய நட்புடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பவ்நிந்தர் சிங் தத்குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அமலாபால் திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருந்தார்.

அந்நிறுவனத்துக்காக 2018-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரியமுதலியார் சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்திருந்திருக்கிறார்கள்.

அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் ஆகிய இருவரும் ஒன்றாக அங்கு தங்கியிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பவ்நிந்தர் சிங் தத், அமலாபாலுடன் ஒன்றாக இருந்தபோது எடுக்கப் பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக அமலாபா லுக்கு மிரட்டல் விடுத் திருக்கிறார்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 26-ம் தேதி அமலா பால் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 30-ம் தேதி பவ்நிந்தர் சிங் தத்தை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பவ்நிந்தர் சிங் தத் தரப்பு வழக்கறிஞர் வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று குற்றவியல் நீதித்துறை நடுவர் வரலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நடுவர்பவ்நிந்தர் சிங் தத்க்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அருகே வேடம்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த பவ்நிந்தர் சிங் தத் விடுவிக்கப்பட்டார். தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் ஆகிய இருவரும் தங்கியிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in