கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: போலீஸார் விசாரணை

கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: போலீஸார் விசாரணை

Published on

கம்பம்: உத்தமபாளையம் அருகே நள்ளி ரவில் ஊருக்குள் 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அரு கேயுள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நேசன் பாடசாலை தெருவில் திடீரென அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. வீடுகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித் துக்கொண்டு வெளியில் வந்தனர். வெளியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது உறுதிப்படுத் தப்பட்டது. ஒரே தெருவில் 6 இடங்களில் வீசப்பட்டுள்ளன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீஸார் விசா ரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in