சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை: தருமபுரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை: தருமபுரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தருமபுரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (60). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அந்த வழியே சென்ற 12 வயது சிறுமியை, மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெய்கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, ஜெய்கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in